"சாதாரண மனிதர்கள், அவர்கள் புனிதமான இடங்களுக்கு யாத்திரை செல்வார்கள், மேலும் அவர்களுடைய பாவச் செயல்களை புனிதமான அந்த இடத்தில் விட்டுவிடுவார்கள். புனிதயாத்திரை செல்லும் நோக்கம் அதுதான், "வாழ்நாள் முழுவதும், நான் செய்திருக்கும் பாவச் செயல்கள் எதுவாக இருப்பினும், நான் இபொழுது அதை இங்கு விட்டுவிடுகிறேன், மேலும் நான் சுத்திகரிக்கப்படுவேன்." அதுதான் உண்மை. ஒருவர் சுத்திகரிக்கப்படுகிறார். ஆனால் சாதாரண மனிதனுக்கு, வாழ்க்கையை புனிதமாக வைத்துக் கொள்ள தெரியாது. ஆகையினால் மறுபடியும் வீட்டிற்க்குச் சென்று மேலும் மறுபடியும் அந்த பாவச் செயலில் ஈடுபடுகிறான். மேலும் சில நேரங்களில் மறுபடியும் அவன் யாத்திரை செல்வான்... உங்கள் தேவாலயத்தில் நடப்பது போல, அவர்கள் வாரந்தோறும் ஆலயம் செல்வார்கள், அவர்கள் பிராயச்சித்தம் செய்வார்கள். எனவே இத்தகைய வேலை நல்லதல்ல. சுத்திகரிக்கப்பட்டபின், நீங்கள் அப்படியே இருக்க வேண்டும். எனவே புனிதமான யாத்திரை ஸ்தலங்கள் சாதாரண மனிதர்களின் பாவச் செயல்களின் எதிர்வினைகளால் குவிக்கப்பட்டிருக்கும் பொழுது, ஒரு புனிதமான நபர் அங்கு செல்லும் போது, அவர் அந்த புனிதமான இடத்தை தூய்மைப்படுத்துகிறார்."
|