"கிருஷ்ணர் இங்கிருந்த போது, அவர் குடும்ப உறுப்பினர் சுமார் பத்து மில்லியன். இதுதான் கிருஷ்ணர். அனைத்தும் அற்புதமாகும். அவர் 16,108 மனைவிகளை மணந்தார், மேலும் ஒவ்வொறு மனைவிக்கும் பத்து குழந்தைகள் இருந்தன, மற்றும் ஒவ்வொறு குழந்தைக்கும் மேலும் பத்து குழந்தைகள் இருந்தன. இவ்வழியாக, யதுகுலம் ஒரு பெரிய குடும்பமாக இருந்தது. எனவே அவர்கள் அழிக்கப்பட்டார்கள். இந்த விஷயத்தில் இரண்டு கருத்துக்கள் உள்ளன, யதுகுலம் ஏன் கிருஷ்ணரின் திட்டப்படி அழிக்கப்பட்டது. ஒரு கருத்துபடி, அவர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தால், அதே தவறான எண்ணங்கள், அதாவது ஒரு ப்ராஹ்மின் குடும்பத்தில் ஒரு ப்ராஹ்மின் பிறந்திருக்கிறான், அவர்கள் தொடர்ந்து பேசுவார்கள், அதாவது 'நாங்களும் பகவான், ஏனென்றால் நாங்கள் பகவான் குடும்பத்தில், கிருஷ்ணர் குடும்பத்தில் பிறந்திருக்கின்றோம்'."
|