"அந்த நிலை யாதெனில் நீங்கள் நிச்சயமான ஒரு நிலைமையின் கீழ் இருக்க வேண்டும். அதுதான் உங்கள் நிலை. எனவே நீங்கள் பகவானால் வரையறுக்கப்பட்டால், அது உங்களுடைய நிறைவான முழுமை. மேலும் நீங்கள் மாயாவால் வரையறுக்கப்பட்டால், அது உங்கள் பிரச்சனை. நீங்கள் வரையறுக்கப்பட வேண்டும். அதுதான் உங்கள் நிலை. நீங்கள் சுதந்திரமாக இருக்க முடியாது. ஆகையினால், நீங்கள் இயற்கையாக வரையறுக்கப்பட்டால், பிறகு அது உங்கள் ஆனந்தமான வாழ்க்கை. ஒரு குழந்தையைப் போல், அவன் நிபந்தனைக்குட்பட வேண்டும். ஆனால் அவன் பெற்றோர்களால் வரையறுக்கப்படும் போது, அதுதான் அவனுடைய நிறைவான வாழ்க்கை. உங்கள் நிலை யாதெனில், அதாவது நீங்கள் வரையறுக்கப்பட வேண்டும். நீங்கள் ஏன் சுதந்திரமாக இருக்க சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? அது உங்களுடைய அயோக்கியத்தனம். உங்களுக்கு எப்பொழுதும் தெரிந்திருக்க வேண்டும், அதாவது 'நான் நிபந்தனைக்குட்பட வேண்டும். அதுதான் என் வாழ்க்கை'."
|