TA/740609 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் பாரிஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நீங்கள் விலங்காக அல்லது மனிதனாக இருந்தால், நீங்கள் இந்த ஜட உடலைப் பெற்றவுடன், நீங்கள் கஷ்டப்பட வேண்டும். இதுதான் நிலை. இது பௌதிக நிலைமை. ஆகையினால் எங்கள் கிருஷ்ண பக்தி இயக்கம், நான் சொல்ல முயலுவது, அது உடலின் துன்பத்தை தணிப்பதற்காக ஆனதல்ல. உடல் என்று இருக்கும் பொழுது, அங்கே நிச்சயமாக துன்பம் இருக்கும். ஆகையால் உடலின் துன்பத்தைக் கண்டு நாம் அதிகம் தொந்தரவாக நினைக்கக் கூடாது, ஏனென்றால் நீங்கள் சிறந்த ஏற்பாடுகள் செய்தாலும், துன்பப்பட்டே ஆக வேண்டும். அமெரிக்கா மேலும் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில். ஐரோப்பிய நகரங்களில் பலவிதமான அழகான ஏற்பாடுகளைக் காணலாம், வாழ்க்கை நிலை, பெரிய வீடுகள், பெரிய சாலைகள், அழகான வாகனங்கள். இந்தியாவுடன் ஒப்பிடுகையில், சில இந்தியர்கள் கிராமத்தில் இருந்து வந்தால், அவர்கள் பார்பார்கள், 'இது சொர்க்கம், மிக அழகான வீடு, மிக அழகான கட்டிடங்கள், மிக அழ்கான வாகனங்கள்'. ஆனால் நீங்கள் கஷ்டப்படவில்லை என்று நினைக்கிறீர்களா? அவன் நினைக்கலாம், அந்த போக்கிரி நினைக்கலாம் அதாவது 'இங்கிருக்கிறது சொர்க்கம்'. ஆனால் இந்த சொர்க்கத்தில் வசிப்பவர்கள், அவர்களுக்கு இது எத்தகைய் சொர்க்கம் என்று தெரியும். (சிரிப்பொலி) எனவே துன்பம் அங்கு நிச்சயம் இருக்கும். இந்த ஜட உடல் கிடைத்தவுடனேயே துன்பம் அங்கே நிச்சயமாக இருக்கும்."
740609 - சொற்பொழிவு SB 02.01.01 - பாரிஸ்