"உண்மையில், அவர்களுக்கு பகவான் வேண்டாம்; அவர்கள் மாயாவை விருபுகிறார்கள். இல்லையெனில், யாரேனும் பகவானை விரும்பினால், கிருஷ்ணரை, அது கடினமல்ல. கிருஷ்ணர் கூறுகிறார், மன்-மனா பவ மத்-பக்தோ மத்-யாஜீ மாம்ʼ நமஸ்குரு (BG 18.65), மாம் ஏவைஶ்யஸி அஸம்ʼஶய꞉ (BG 18.68). நான்கு விஷயங்கள். 'சும்மா எப்பொழுதும் என்னைப் பற்றியே நினையுங்கள்' மன்-மனா. மத்-பக்த꞉: 'சும்மா என் பக்தனாகுங்கள்'. மத்-யாஜீ: 'என்னை வழிபடு, மேலும் எனக்கு உங்கள் வணக்கத்தை அளியுங்கள். நீங்கள் சும்மா இந்த நான்கு விஷயங்களை செய்தால், பிறகு சந்தேகமே இல்லாமல் நீங்கள் என்னிடம் வந்து கொண்டிருப்பீர்கள்'. இந்த நான்கு விஷயங்கள். ஆனால் அவர்களால் அதைச் செய்ய முடியாது அல்லது செய்யமாட்டார்கள். இல்லையென்றால், மிகவும் சுலபம். நாம் எப்போதும் ஏதோ ஒன்றைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்போம். வெறுமனே அதற்கு பதிலாக கிருஷ்ணரை நினையுங்கள். இல்லை. அவர்கள் கிருஷ்ணரை தவிர பல மற்ற விஷயங்களை பற்றி நினைப்பார்கள். அதுதான் சிரமம்."
|