"அது மிகவும் கடினம்... மேற்கத்திய மக்களுக்கு, உடல் முக்கியமானதல்ல என்பதை புரிந்து கொள்ள, ஆன்மா தான் முக்கியமானது. முதலில், அவர்களுக்கு ஆன்மா என்பது என்னவென்று தெரியவில்லை, அதன் பிறகு முக்கியத்தை கருத்தில் கொள்ளலாம். இதுதான் அவர்களுடைய நிலை. மேலும் ஒருவருக்கு ஆன்மா என்னவென்று புரியவில்லை என்றால், பகவானைப் பற்றி அவனுக்கு எப்படி புரிந்துக் கொள்ள முடியும்? ஆன்மா பகவானின் ஒரு மிகச் சிறிய துகள். ஒருவருக்கு இந்த சிறிய துகளைப் பற்றி புரிந்துக் கொள்ள முடியவில்லை என்றால், பிறகு பூரணத்தைப் பற்றி என்ன புரிந்துக் கொள்ள முடியும்? ஆய்வகத்தில், ஒரு சிறிய மாதிரி சோதனையை உங்களால் செய்ய முடிந்தால், சும்மா சிறிதளவு கடல் தண்ணீர் எடுத்து பகுப்பாய்வு செய்தால், நீங்கள் இரசாயன சோதனை செய்தால், அதன் பிறகு கடல் நீரின் கலவை என்ன என்பதை நீங்கள் புரிந்துக் கொள்ள இயலும். ஆனால் ஒரு சிறு நீர் துளியைப் பற்றிய அறிவு கூட இல்லையென்றால், நீங்கள் எவ்வாறு கடலைப் பற்றி புரிந்துக் கொள்ள முடியும், என்ன... அதுதான் அவர்கள் நிலை. நம்மைப் போல் அவர்களுக்கு ஆன்மாவின் மாதிரி கூட புரியவில்லை. அவர்கள் சும்மா மறைக்க முயற்சிக்கிறார்கள்: 'ஆன்மா என்று ஒன்றும் இல்லை. ஆன்மா என்று ஒன்றும் இல்லை. உயிர், மூலப் பொருளிலிருந்து உருவாக்கப்பட்டது,' அவர்களால் நிரூக்க இயலாவிட்டாலும்."
|