"புருஷ என்றால் அனுபவிப்பவர். புருஷ. மேலும் ப்ரக்ருʼதி என்றால் அனுபவிக்கப்படுபவர். அனுபவிக்க இரண்டு விஷயங்கள் தேவைப்படுகிறது: ஒன்று அனுபவிப்பவர், மற்றொன்று அனுபவிக்கப்படுபவர். நாம் ஏதோ ஒன்றை உட்கொள்ளும் போது, அதை உண்பவர் அனுபவிப்பவர். மேலும் உணவுப் பொருள் அனுபவிக்கப்படுகிறது. எனவே இங்கே, இந்த பௌதிக உலகில் உயிர்வாழிகள், இயற்கையாக அது அனுபவிக்கப்படும் ஒன்றாக இருப்பினும், அறியாமையால் அனுபவிக்கப்படும் அது அனுபவிப்பவர் என்று கூறுகிறது. நடைமுறை உதாரணமாக ஆண்ணும் பெண்ணும் எடுத்துக் கொண்டால், ஆண் அனுபவிப்பவராக கருதப்படுகிறது மேலும் பெண்கள் அனுபவிக்கப்படுபவராக கருதப்படுகிறது. எனவே அனுபவிக்கப்படுவது என்றால் ப்ரக்ருʼதி, அல்லது பெண், மேலும் அனுபவிப்பவர் என்றால் புருஷ அல்லது ஆண். எனவே உண்மையில், உயிர்வாழிகளான நாம் அனைவரும், ப்ரக்ருʼதி; நாம் புருஷ அல்ல."
|