"இந்த பௌதிக உலகம் இருள் நிறைந்தது என்று வேத இலக்கியத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது இருள் நிறைந்தது, ஆகையினால் நமக்கு சூரியஒளி, நிலவொளி, மின்சார ஒளி தேவைப்படுகிறது. அது இருளாக இல்லையென்றால், பிறகு எதற்காக பல ஒளியூட்டும் ஏற்பாடுகள்? உண்மையில், அது இருள் நிறைந்தது. அதை செயற்கை முறையில் ஒளியூட்டுகிறோம். ஆகையினால் வேத கட்டளை யாதெனில் "இருளில் இருக்காதீர்கள்." தமஸி மா ஜ்யோதிர் கம. "வெளிச்சத்திற்குச் செல்லுங்கள்." அந்த ஒளி தான் ஆன்மீக உலகம். அது நேரடியான பிரகாசம், அல்லது கிருஷ்ணரின் உடலின் கதிர்கள்."
|