"காய்ச்சலற்று இருக்க... ஒருவர் காய்ச்சலில் துன்பப்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம், மருந்து கொடுக்கப்படுகிறது, மேலும் காய்ச்சல் குணமாகிறது—காய்ச்சல் நின்றுவிட்டது. அது போதுமானதாகாது. காய்ச்சல் மட்டும் நின்றுவிட்டால் போதாது, ஆனால் நீங்கள் வலிமை பெற வேண்டும், உங்களுக்கு பசி எடுக்க வேண்டும், நீங்கள் பழையபடி சாதாரண வாழ்க்கை நிலையை அடைய வேண்டும். அப்பொழுதுதான் அது நோய்க்கான சரியான சிகிச்சை. அதேபோல், ப்ரஹ்ம-ஸித்தயே, அதை உணருவதற்கு "நான் ஜீவ ஆத்மா,"போதுமானதல்ல. நீங்கள் ஆன்மீக செயல்களில் ஈடுபடவேண்டும். அதுதான் பக்தி."
|