"நீங்கள் ஒரு ப்ராஹ்மணரின் குணங்களை பெற்றிருந்தால், மேலும் நீங்கள் ஒரு ப்ராஹ்மணரைப் போல வேலை செய்தால், பிறகு குண-கர்ம-விபாகஶ꞉, நீங்கள் ஒரு ப்ராஹ்மணராகிவிடுவீர்கள். உங்களுக்கு ஒரு க்ஷத்ரியரின் குணங்கள் இருந்து மேலும் ஒரு க்ஷத்ரியனைப் போல் வேலை செய்தால், பிறகு நீங்கள் க்ஷத்ரியனாகிவிடுவீர்கள். உங்களுக்கு ஒரு வணிகரின், தொழிலதிபர் குணங்கள் இருந்து, மேலும் நீங்கள் ஒரு வணிகனாக அல்லது உழவராக வேலை செய்தால், பிறகு நீங்கள் வைஶ்யராவீர்கள். இது அறிவியல் பூர்வமானது. ஒருவர் அவர்களுடைய பிறப்பின் வழி வகைப்படுத்தப்படுகிறார்கள் என்பதல்ல. இல்லை. தகுதிக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகிறார்கள்."
|