TA/741122 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே நீங்கள் உண்மையில் உங்கள் அனைத்தையும் சரணடைந்து, உங்கள் வாழ்க்கை... ப்ராணைர் அர்தைர் தியா வாசா (SB 10.22.35). நாம் நம் வாழ்க்கையை, சொத்துக்களை—ப்ராண, அர்த, தியாகம் செய்யலாம். நம் அறிவை தியாகம் செய்யலாம். அனைவரும் அறிவாளிகள். அவன் தியாகம் செய்தால்... இது யஜ்ஞ என்று அழைக்கப்படுகிறது. நீங்கள் தியாகம் செய்தால்... உங்களுக்கு சிறிது அறிவு இருக்கிறது. தன்னுடைய புலன்நுகர்வை எவ்வாறு மிக அருமையாக வைத்துக் கொள்வது என்பதில் அனைவரும் அறிவாளிகள். ஒரு எறும்புக்கு கூட அதன் புலன்களை திருப்திப்படுத்திக் கொள்ள தெரியும். எனவே நீங்கள் அதை தியாகம் செய்ய வேண்டும். உங்கள் புலன்களை திருப்திப்படுத்திக் கொள்ளாதீர்கள், ஆனால் கிருஷ்ணரின் புலன்களை திருப்திப்படுத்த முயற்சி செய்யுங்கள். பிறகு நீங்கள் பூரணத்துவம் அடைவீர்கள்."
741122 - சொற்பொழிவு SB 03.25.22 - மும்பாய்