"நம் முக்கியமான வேலை கிருஷ்ணருக்கு சேவை செய்வதே. வ்ருʼந்தாவனத்தில், கோலோக வ்ருʼந்தாவனத்தில், யாரோ கிருஷ்ணருக்கு நண்பனாக, மாட்டிடையானாக சேவை செய்கிறார்கள். யாரோ கிருஷ்ணருக்கு கோபியாக, காதலியாக சேவை செய்கிறார்கள். யாரோ கிருஷ்ணருக்கு தந்தையாக மேலும் தாயாக, தாய் யசோதை, நந்த மஹாராஜாவாக சேவை செய்கிறார்கள். யாரோ கிருஷ்ணரின் நண்பனாக, சேவகனாக, மரமாக, தண்ணீராக, பூக்களாக, நிலமாக, பசுவாக, கன்றாக இருக்கிறார்கள். பற்பல விதத்தில் செய்கிறார்கள். இதுதான் நம் வேலை. ஆனால் எப்படியோ நாம் கிருஷ்ணருக்கு சேவை செய்ய விரும்பவில்லை. ஆகையினால் நாம் இயற்கையின் மூன்று குணத்தில் மாயாவிற்கு சேவை செய்ய அனுபப்பட்டுவிட்டோம்."
|