"பக்தியை தவிர மற்ற எதையும் கிருஷ்ணரிடம் கேட்பது முட்டாள்தனமாகும். அது முட்டாள்தனமாகும். என் குரு மஹாரஜ் வழக்கமாக எங்களுக்கு இதை உதாரணமாக கொடுப்பார்: எவ்வாறு என்றால், நீங்கள் ஒரு பணக்காரனிடம் சென்று, மேலும் அவன் இவ்வாறு கூறினால், 'இப்போது, உனக்கு எது பிடித்திருந்தாலும், நீ என்னிடம் கேட்கலாம், நான் உனக்கு கொடுப்பேன்,' பிறகு நீ அவனிடம் கேட்டால், அதாவது 'நீ எனக்கு சாம்பல் ஒரு சிட்டிகை கொடு,' அது மிகவும் புத்திசாலிதனமானதா? அதேபோல், செய்ய ... அங்கே ஒரு கதை உள்ளது, அதாவது காட்டில் இருக்கும் ஒரு முதியவள்... ஏஸோப் கட்டுக்கதை அல்லது வேறு எங்கோ. ஆக அவள் ஒருபெரிய கட்டு காய்ந்த விறகு தூக்கிக் கொண்டிருந்தாள், மேலும் எப்படியோ அந்த கட்டு கிழே விழுந்துவிட்டது. அது மிகவும் கனமாக இருந்தது. எனவே அந்த முதியவள் மிகவும் தொந்தரவாக காணப்பட்டாள், 'இந்த கட்டை என் தலை மேல் எடுத்து வைக்க யார் எனக்கு உதவி செய்வார்?' எனவே அவள் பகவானை அழைக்க தொடங்கினாள், 'பகவானே, எனக்கு உதவி செய்யுங்கள்.' பகவான் வந்தார்: 'உனக்கு என்ன வேண்டும்?' 'கனிவோடு இந்த கட்டை என் தலையில் வைக்க எனக்கு உதவி செய்யுங்கள்.' (சிரிப்பொலி) சும்மா பாருங்கள். பகவான் ஆசீர்வாதம் கொடுக்க வந்தார், மேலும் அவள் விரும்பியது 'இந்த கட்டை மீண்டும் என் தலையில் வைய்யுங்கள்'."
|