"ப்ரக்ருʼதே꞉ க்ரியமாணானி குணை꞉ (BG 3.27)... நாம் மாயாவால் செய்யப்பட்ட ஒரு இயந்திரத்தில் இருக்கின்றோம். நாம் இந்த இயந்திரத்தில் இருக்கும்வரை, இந்த இயந்திரம் பழையதாகிவிடும் மேலும் நீங்கள் அதை மற்றொரு இயந்திரத்திற்காக மாற்ற நேரிடும். இதுதான் நடந்துக் கொண்டிருக்கிறது. அது ஜன்ம-ம்ருʼத்யு என்று அழைக்கப்படுகிறது. இது பிறப்பு மேலும் இறப்பு என்று அழைக்கப்படுகிறது. இல்லையெனில் உங்களுக்கும் எனக்கும், நமக்கு பிறப்பு மேலும் இறப்பு இல்லை. ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித். ஆன்மா, அல்லது ப்ரஹ்மன், அவன் பிறவி எடுப்பதில்லை அல்லது இறப்பதுமில்லை. நாம் வெறுமனே இந்த இயந்திரத்தை மாற்றுகிறோம், இந்த உடலை. ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே (BG 2.20)."
|