TA/750102 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"வேத கட்டளை யாதெனில் நாம் பல உயிர் வாழிகளுக்கு கடமைப்பட்டுள்ளோம், மேலும் நாம் அவர்களை திருப்திப்படுத்த வேண்டும். பல வசதிகளை கொடுக்கும் அரசாங்கத்திற்கு நாம் கடமைப்பட்டிருப்பது போல், மேலும் உங்கள் கடமையை நிறைவேற்ற நீங்கள் சும்மா வரி செலுத்த வேண்டும். நீங்கள் வரி செலுத்தவில்லை என்றால், நீங்கள் குற்றவியலுக்கு பொறுப்பாவீர்கள். அதேபோல், நாம் இந்திரா, சந்திரா ஆகியோரிடமிறுந்து பல வசதிகளை பெற்றுக் கொண்டிருக்கிறோம். இந்திராவிடமிருந்து மழையை பெறுகிறோம், சந்திராவிடமிருந்து, அல்லது சந்திர பகவானிடமிருந்து நிலவொளியை பெறுகிறோம், மேலும் சூரிய பகவானிடமிருந்து சூரிய ஒளியை பெறுகிறோம். இவை, வெப்பமும், ஒளியும் அத்தியாவசியமான விஷயங்கள். எனவே நாம் நிச்சயமாக கடமைப்பட்டிருக்கிறோம். ஆனால் நீங்கள் கிருஷ்ணரின் பாதுகாப்பில் இருந்தால், நீங்கள் அனைத்து கடமைகளிலிருந்தும் விடுதலை பெறுவீர்கள். கிருஷ்ணர் கூறுகிறார், அஹம்ʼ த்வாம்ʼ ஸர்வ-பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி (BG 18.66). நீங்கள் வரி செலுத்தாவிட்டால், பிறகு நீங்கள் தண்டனைக்கு பொறுப்பாவீர்கள். அது பாவமாகும்."
750102 - சொற்பொழிவு SB 03.26.25 - மும்பாய்