TA/750104 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"கிருஷ்ணர், எல்லோரும் அவரிடம் சரணடைவதை விரும்புகிறார். கிருஷ்ணர் இவ்வாறு கூறும் போது, ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ (BG 18.66), அவர் அதை அர்ஜுனரிடம் மட்டும் கூறவில்லை; அவர் அனைவரிடமும் கூறுகிறார். எனவே அதுவே கிருஷ்ணரின் ஆசை, மேலும் நீங்கள் கிருஷ்ணருக்கு அவர் ஆசையை நிறைவேற்ற சேவை செய்ய வேண்டுமென்றால், கிருஷ்ணரிடம் சரணடையச் சொல்லி நீங்கள் அனைவரிடமும் ஆதரவு கோர வேண்டும். இதுதான் நீதி போதனை. கிருஷ்ணர் இதைத்தான் விரும்புகிறார். அது பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. எனவே உங்கள் வேலை கிருஷ்ணரை திருப்திபடுத்துவதே ஆகும். எனவே அதை செய்யுங்கள். நீங்கள் ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள்? நீங்கள் ஏன் முக்தியை தேடுகிறீர்கள், ஸித்தி மேலும் புக்தி?இவை அனைத்தும் தனிப்பட்டது. புண்ய பெற பக்தி தொண்டு செய்யும் எவருக்கும், அதன் முடிவு என்ன? புண்ய என்றால் அவர் பரலோக கிரகத்திற்குச் செல்வார். அதுதான் புலன் நுகர்வு."
750104 - சொற்பொழிவு SB 03.26.27 - மும்பாய்