TA/750105 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம். நவ-யௌவனம்ʼ ச. இது... இந்த விரிவாக்கம் பழங்காலம் தொட்டு நடந்துக் கொண்டிருக்கிறது. இருப்பினும், பகவான் நவ-யௌவனம் ஆவார், மிகவும் இளமையானவர், பதினாறு முதல் இருபது வயதுவரை அவ்வளவுதான். புராண. அவர் ஆதியாக இருப்பினும், அனைத்து ஜீவாத்மாக்களின் தோற்றத்திற்கு மூலவர், இருந்தும் அவர் இளமையாக இருக்கிறார். மேலும் அவர் பல விரிவாக்கம் செய்த போதிலும், இன்னும் அவர் ஒருவரே. அத்வைதம் அச்யுதம் அநாதிம் அனந்த-ரூபம் (Bs. 5.33). அத்வைத. அத்வைத என்றல் ஒன்று, அவர் பல விரிவாக்கம் புரிந்ததால், அவருக்கு பல உருவம் ... அவர் பற்பலவாகினார். இல்லை. அவர் ஒருவரே. பூர்ணஸ்ய பூர்ணம் ஆதா³ய பூர்ணம் ஏவ அவஶிஷ்யதே (Īśo Invocation). அதுதான் பூரணமான அறிவு, அதாவது நித்தியமான பகவான், அவர் தானே பூரணமான உருவம், வரம்பற்ற உருவம், வரம்பற்ற நித்தியமான உருவம், இருப்பினும் அவர் பூரணமாகவே இருப்பார்."
750105 - சொற்பொழிவு SB 03.26.28 - மும்பாய்