"ஆக நாம் வாழ்க்கையின் நோக்கம் என்ன என்பதைப் பற்றி விழிப்பான நிலையில் இல்லை. எனவே கிருஷ்ணர் மிகவும் கருணையுள்ளவர். ஆகையினால் அவர் வருகிறார். அவர் இந்த கலியுக ஆரம்பத்தின் சற்று முன்பாக வந்தார், மிகவும் வீழ்ந்த யுகம், மேலும் நமக்காக பகவத் கீதையை விட்டுச் சென்றார். அதன் பின்பு, அவருக்கு பிறகு, அவருடைய புறப்பாடுக்கு பின்... ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்பட்டுள்ளது, 'கிருஷ்ணர் இந்த கிரகத்திலிருந்து அவருடைய சொந்த வசிப்பிடம் சென்ற பிறகு, மதத்தின் கொள்கை மேலும் அறிவு, அது எங்கே வைக்கப்பட்டது?' இதன் விடை யாதெனில் 'அது ஸ்ரீமத் பாகவதத்தில் வைக்கப்பட்டுள்ளது'."
|