TA/750111 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மும்பாய் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பகவத் கீதையில் கூறப்பட்டுள்ள அறிக்கை அதாவது இறக்கும் நேரத்தில் இருக்கும் மன நிலைதான் அடுத்தப் பிறவியின் அடிப்படை, இது பின்வரும் பதத்தில் உறுதிப்படுத்தப்படுகிறது." யம்ʼ யம்ʼ வாபி ஸ்மரன் பாவம்ʼ த்யஜத்ய் அந்தே கலேவரம் (BG 8.6). பொதுவாக, நம் இந்த பௌதிக கண்கள், புலன்கள், ஸ்தூல பார்வை, இவற்றால் இறக்கும் ஒருவரையும் மேலும் அவர் எவ்வாறு மற்றொரு உடலுக்கு மாற்றப்படுகிறார் என்றும் நாம் பார்க்க முடியாது. ஸ்தூல ஜட விஞ்ஞானிகள், அறிஞர்கள், அவர்கள் கண்களால் காண முடியாததால், அவர்கள் ஆன்மா ஒன்று இருப்பதை நம்ப மறுக்கிறார்கள், மேலும் ஆன்மா ஒரு உடலில் இருந்து மற்றொரு உடலுக்கு மாற்றப்படுகிறது என்பதை நம்பவில்லை. பெரிய விஞ்ஞானிகள், பெரிய அறிஞர்கள், அவர்கள் நம்பவில்லை."
750111 - சொற்பொழிவு SB 03.26.34 - மும்பாய்