"எனவே பகவத் கீதையில் கூறப்பட்டுள்ளது, மாத்ரா-ஸ்பர்ஶாஸ் து கௌந்தேய ஶீதோஷ்ண-ஸுக-து꞉க-தா꞉ (BG 2.14). ஆகவே நம் ஜட வலியும் மகிழ்ச்சியும் இந்த ஸ்பர்ஶவால், ஒளி அலைகளின் ஏற்பாட்டால் மேலும் அதன் மாற்ற செயல்களால் உணரப்படுகிறது. உண்மையில், ஆன்மீக ஆன்மாவிற்கு இதில் சம்மந்தம் இல்லை. ஆன்மீக ஆன்மா இவைகளால் பாதிப்படைவதில்ல. இதற்கு எளிமையான உணர்தல் தேவைப்படுகிறது. பரத் மஹாராஜ் அல்லது ப்ரஹ்லாத மஹாராஜ், ஹரிதாஸ டாகுர, போன்ற சிறந்த பக்தர்கள், ஆன்மீக உணர்வில் மிக மிக முன்னேற்றம் அடைந்திருப்பதால் பகிரங்க உடலில் இருக்கும் ஒளி அலைகள் அவர்கள் உடலை தீண்டவில்லை. மேற்கத்திய உலகத்தில் கூட, பகவான் ஏசு நாதர், அவர் சிலுவையில் அறையப்பட்டார், ஆனால் அது அவரை தீண்டவில்லை."
|