"ஆனால் நாம் முற்றிலும் கிருஷ்ணரை சார்ந்திருந்தால், காரியங்கள் நன்றாக நடைபெறும். அவரிடம் அத்தகைய சிறந்த வழிமுறைகள் உள்ளன. முதல் காரியமாக அவர் அனைவரின் இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். ஸர்வஸ்ய சாஹம்ʼ ஹ்ருʼதி³ ஸந்நிவிஷ்ட꞉ (BG 15.15). எனவே சம்மந்தபட்ட கடமைகளை செய்ய அவரால் அறிவுரைகள் அளிக்க முடியும்—ஆனால் மற்றொறு விஷயமும் தேவைப்படுகிறது: தனிப்பட்ட கருத்து. தனிப்பட்ட ஜீவாத்மாக்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள, ஆனால் உங்கள் சிறிய சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது. அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மேலும் கிருஷ்ணரின் மற்றொறு வேலை யாதெனில்: அவர் ஜீவாத்மாக்களுக்கு அளித்த அந்த சிறிய சுதந்திரித்தில் தலையிடுவதில்லை. எனவே அவன் கட்டாயமாக தானாக முன்வந்து தன் சிறிய சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்."
|