"ஒருவர் சாதகமாக இருக்கிறார், மேலும் மற்றொருவர் சாதகமற்றவராக இருக்கிறார். ஒருவர் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருக்கிறார், அவரை எவ்வாறு கொலை செய்யலாம் என்று, மேலும் மற்றொருவர் கிருஷ்ணரை நினைத்துக் கொண்டிருக்கிறார், அவருக்கு எவ்வாறு சேவை செய்யலாம் என்று. ஆக இந்த சிந்தனை, அவருக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை , பக்தி என்று அழைக்கிறோம், மற்றபடி இல்லை. கம்ஸா எவ்வாறு அவரை கொலை செய்வது என்று சிந்தனை செய்துக் கொண்டிருந்தான், அது பக்தி அல்ல. பக்தி என்றால் ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானுஶீலனம் (CC Madhya 19.167). அனுகூல. அனுகூல என்றால் சாதகமாக. நீங்கள் பல விதத்தில் சாதகமாக கிருஷ்ணரைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தால்—கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது, அவரை எப்படி அலங்கரிப்பது, கிருஷ்ணருக்கு ஒரு அழகான இருப்பிடமாக, ஒரு கோவிலை, எப்படி அளிப்பது, கிருஷ்ணரின் மகிமைகளை எவ்வாறு போதிப்பது—இம்மாதிரியாக, நீங்கள் சிந்தித்தால், அதுதான் கிருஷ்ண உணர்வு. ஆனுகூல்யேன க்ருʼஷ்ணானுஶீலனம்ʼ பக்திர் உத்தமா. கிருஷ்ணருக்கு எவ்வாறு சேவை செய்வது, அதுதான் முதல்தரமான பக்தி."
|