"ஹரே கிருஷ்ணா உச்சாடனத்தின் அதிர்வால், அந்த சப்தத்தால், நீங்கள் படிப்படியாக சுத்திகரிக்கப்படுகிறீர்கள். சேதோ-தர்பண-மார்ஜனம். சேதோ-தர்பண. தர்பண என்றால் கண்ணாடி. எவ்வாறு என்றால் கண்ணாடியில் தூசி மூடி இருக்கும், உங்கள் முகத்தை தெளிவாக பார்க்க இயலாது. ஆனால் அது சுத்தமாக துடைக்கப்பட்டால், பிறகு உங்கள் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது என்று நீங்கள் பார்க்கலாம். எனவே அதேப்போல், நீங்கள் மஹா மந்திரத்தை உச்சாடனம் செய்ய ஆரம்பித்த உடனடியாக, வெறுமனே உச்சாடனம் செய்வதன் மூலம் நீங்கள் படிப்படியாக தன்னை உணர்ந்துக் கொள்வீர்கள், அஹம்ʼ ப்ரஹ்மாஸ்மி."
|