"நான் உங்கள் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளமாட்டேன், ஆனால் கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் என்ன என்பதை நீங்கள் திருப்தி கொள்ளும்வகையில் புரியவைக்க முயற்சி செய்வேன். கிருஷ்ண பக்தி இயக்கத்தின் நோக்கம் யாதெனில் மனித சமூகத்தை விலங்குகளாவதிலிருந்து காப்பாற்றுவதாகும்—மாடுகள் மேலும் கழுதகள். இதுதான் இந்த இயக்கம். பகவத் கீதையில் கூறியிருப்பது போல், அவர்கள் தங்கள் நாகரீகத்தை நிறுவிவிட்டார்கள், விலங்குகளாக அல்லது அசூர நாகரீகமாக. அசூர நாகரீகத்தின் ஆரம்பம் யாதெனில் ப்ரவ்ருʼத்திம்ʼ ச நிவ்ருʼத்திம்ʼ ச ஜனா ந விதுர் ஆஸுரா꞉ (BG 16.7). அசூரிக், பிசாசு நாகரீகம், அவர்களுக்கு பூரணத்துவம் நிறைந்த வாழ்க்கையை அடைய எவ்விதத்தில் நம்மை வழிநடத்திக் கொள்வது என்று தெரியாது, ப்ரவ்ருʼத்தி, மற்றும் நிவ்ருʼத்தி, மேலும் எவ்வழியை நாம் மேற்கொள்ளக் கூடாது—சாதகமான மற்றும் சாதகமற்றது."
|