TA/750125 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹாங்காங் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் ஒரு பிறவியிலிருந்து மற்றொன்றுக்கு மாற்றிக் கொண்டு போகிறோம், ஆனால் நாம் பகவானை புரிந்துக் கொள்ள விரும்பினால்... அது அத்தியாவசியமானது. நாம் பகவானை புரிந்துக் கொள்ளாதவரை, நாம் வீடுபேறு அடைய விரும்பாதவரை, இறைவனை சென்று அடையாதவரை, நம் வாழ்க்கையின் போராட்டம் தொடர்ந்துக் கொண்டிருக்கும். மன꞉ ஷஷ்டானீந்த்ரியாணி ப்ரக்ருʼதி-ஸ்தானி கர்ஷதி (BG 15.7). இந்த போராட்டம். அனைவரும் ஆனந்தமாக இருக்க கடினமாக போராடுகிறார்கள். ஆனால் அது சாத்தியமல்ல. வெறுமனே தேடிக் கொண்டிருப்பது, மகிழ்ச்சியை தேடிக் கொண்டிருப்பது, நேரம் வரும் பொழுது: 'முடிந்துவிடும். உங்கள் வேலை முடிந்துவிடும். இப்பொழுது வெளியே சென்றுவிடு'. அதுதான் மரணம் என்று அழைக்கப்படுகிறது. எனவே மரணமும் கிருஷ்ணர்தான். கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியிருக்கிறார், ம்ருʼத்யு꞉ ஸர்வ-ஹரஶ் சாஹம் (BG 10.34). ம்ருʼத்யு꞉ கிருஷ்ணர் மரணமாக வருகிறார். உங்கள் வாழ்நாளில், நீங்கள் கிருஷ்ண உணர்வை புரிந்துக் கொள்ளவில்லை என்றால், இந்த கிருஷ்ணர் மரணமாக வந்து மேலும் உங்களிடம் இருக்கும் அனைத்தையும் எடுத்துகொள்வார். ஸர்வ-ஹர꞉. பிறகு உங்கள் உடல், உங்கள் குடும்பம், உங்கள் நாடு, உங்கள் வங்கி, அனைத்து தொழில், வேலை—முடிந்துவிடும். 'இப்பொழுது நீங்கள் மற்றொறு உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். இந்த விஷயங்கள் அனைத்தையும் மறந்துவிடுவீர்கள்.' இதுதான் நடந்து கொண்டிருக்கிறது."
750125 - சொற்பொழிவு BG 07.01 - ஹாங்காங்