TA/750129 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"நாம் அனைவருக்கும் எல்லா மரியாதையும் அளிக்கின்றோம், எறும்புக்கு கூட, ஆனால் அதற்காக எந்த தேவரும், எந்த தீயது, எந்த போக்கிரியும் பகவானாக வழிபாடு செய்யப்பட வேண்டும் என்று பொருள்படாது? இல்லை. அது சாத்தியமல்ல. முக்கியமற்ற எறும்புக்கு கூட நாம் மரியாதை காட்டலாம். த்ருʼணாத் அபி ஸுநீசேன தரோர் அபி ஸஹிஷ்ணுனா (CC Ādi 17.31, Śikṣāṣṭaka 3). அது மற்றொரு விஷயமாக இருக்கலாம். ஆனால் யாரேயேனும் பகவானாக நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. அது சாத்தியமல்ல. அதுதான் அறிவு. அதுதான் அறிவு. உறுதியாக நம்புங்கள், க்ருʼஷ்ணஸ் து பகவான் ஸ்வயம் (SB 1.3.28): "பகவான் என்றால் கிருஷ்ணர், வேறு எவரும் இல்லை." காமைஸ் தைஸ் தைர் ஹ்ருʼத-ஜ்ஞானா꞉ யஜந்தே அன்ய-தேவதா꞉ (BG 7.20). அன்ய-தேவதா꞉ பகவானாக ஏற்றுக் கொள், அவர்கள் போக்கிரிகளால் ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள், ஹ்ருʼத-ஜ்ஞானா꞉, தங்கள் அறிவை இழந்தவர்கள். அவர்கள் இழந்துவிட்டார்கள் தங்களுடைய... ஹ்ருʼத-ஜ்ஞானா꞉, மேலும் நஷ்ட-புத்தய꞉, தங்கள் அறிவை இழந்துவிட்டவர்கள்.

எனவே உங்கள் அறிவை இழந்துவிடாதீர்கள். கிருஷ்ணாவுடன் இணைந்திருங்கள் மேலும் அவருடைய வார்த்தைகளை அவர் கூறியபடி ஏற்றுக் கொள்ளுங்கள். பிறகு ஒரு நாள் அச்சமற்றவராவீர்கள், அபயம்ʼ ஸத்த்வ-ஸம்ʼஶுத்தி꞉ (BG 16.1). உங்கள் ஆன்மீக வாழ்க்கை சுத்திகரிக்கப்படும்"

750129 - சொற்பொழிவு BG 16.01-3 - ஹானலுலு