TA/750130 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"அசூர பண்புகள் ஏற்கனவே அங்கிருக்கிறது. ஒரு தம்ப꞉வைப் போல். ஒரு நாய்க்கும் பெருமை இருக்கிறது: "நான் இந்த நாய், ஹ்ர்ர்." (சிரிப்பொலி) "நான் நரி டெரியர். நான் இது. நான் அது." எனவே தம்ப꞉ அங்கிருக்கிறது, நாயிலும் கூட, கீழ் இன விலங்குகளிலும், பூனையிலும் கூட. ஆனால் தெய்வீக பண்புகள், "ஓ, நான் மிகவும் தாழ்ந்தவன்," த்ருʼணாத் அபி ஸுநீசேன, "நான் புற்களைவிட தாழ்ந்தவன். நான் புற்களைவிட தாழ்ந்தவன்"... இது சைதன்ய மஹாபிரபுவின் போதனைகள். இது என்ன தம்ப꞉ ? நான் ஏன் பெருமை கொள்ள வேண்டும்? இந்த பெருமை என்பது என்ன? எனவே அதுதான் அறியாமை, அறியாமையினால் ஏற்படுவது. ஒரு மனிதன் தேவையற்று பெருமை கொள்கிறான் என்றால் அது அறியாமையினால் தான். மேலும் சைதன்ய-சரிதாம்ருʼத ஆசிரியர், அவர் தன்னைப் பற்றி விவரிக்கிறார் அதாவது "நான் மலத்தில் இருக்கும் புழுக்களைவிட தாழ்ந்தவன்.""
750130 - சொற்பொழிவு BG 16.04 - ஹானலுலு