TA/750131 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"தன்னை-உணர்தல் என்றால் ஹம்பக் என்று அர்த்தமல்ல. தன்னை-உணர்தல் என்றால் அவனுடைய மெய் நிலையை அறிந்துக் கொள்வது, நான் யார். எவ்வாறு என்றால் ஸனாதன கோஸ்வாமீ ஶ்ரீல கௌரஸுந்தர, சைதன்ய மஹாபிரபு ஆகியோரை அணுகினார். அவர் கேட்டார், கே ஆமி: "நான் யார்?" கே ஆமி:... கே ஆமி, கேனே ஆமாய ஜாரே தாப-த்ரய (CC Madhya 20.102): "என்னுடைய மெய் நிலை என்ன? நான் ஏன் இந்த பௌதிக வாழ்க்கையின் மூவகை துயரங்களில் துன்பப்படுகிறேன்?" இதுதான் அந்த விசாரணை. அனைவரும் கஷ்டப்படுகிறார்கள். யாரோ அறியாமையில் இருக்கிறார்கள்: அவன் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும், அவன் தான் மிகவும் நன்றாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது. மாயா என்றால் இல்லாத ஒன்றை நீங்கள் ஏற்றுக் கொள்வது. இதைத்தான் மாயா என்று அழைக்கின்றோம். மா யா: "நீங்கள் எதை ஏற்றுக் கொள்கிறீர்களோ, அது பொய்யானது." இதுதான் மாயா என்று அழைக்கப்படுகிறது."
750131 - சொற்பொழிவு BG 16.05 - ஹானலுலு