"நீங்கள் உங்கள் புலன்களை ஊக்குவித்து பகவான் எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்க முயன்றால், ஆன்மா எங்கிருக்கிறது... மருத்துவர்கள் தினமும் அறுவை சிகிச்சை செய்கிறார்கள், இதய அறுவை சிகிச்சை, மேலும் பல மென்மையான அறுவை சிகிச்சை செய்கிறார்கள், ஆனால் அவர்களால் ஆன்மா எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் ஆன்மா அங்கிருக்கிறது. அதை நம்மால் உணரமுடிகிறது. ஆன்மா உடலைவிட்டு போகும் பொழுது, நாம் புரிந்துக் கொள்கிறோம், "இப்போது ஆன்மா சென்றுவிட்டது; உடல் இறந்துவிட்டது." எனவே உங்களால் உணரமுடிகிறது, உங்களால் பார்க்க முடியாது. உங்கள் ஸ்தூல புலன்களால் ஊக்குவிப்பதால் அதை புரிந்துக் கொள்ள முடியாது. உங்களால் முடியாது... நீங்கள் மனம் என்பது என்ன, அறிவு என்றால் என்ன, ஆன்மா என்பது என்ன, பரமாத்மா என்பது என்ன, உங்களுடைய இந்த மழுங்கிய கண்களால், கட்டுண்ட கண்களால் பார்ப்பது சாத்தியமில்லை. அனைவரும் தங்கள் புலன்களால் பெருமை கொள்கிறார்கள். யாரோ சொன்னார், "பகவானை உங்களால் எனக்கு காண்பிக்க முடியுமா? " ஆனால் முதலில் பகவானை பார்க்க உங்களுக்கு சக்தி இருக்கிறதா?"
|