TA/750203b சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே அறியாமை நிறைந்த வாழ்க்கை நிலையில் இருக்காதீர்கள். அதைதான் ஶூத்ர என்று அழைக்கிறோம். ப்ராஹ்மணவாக முயற்சி செய்யுங்கள். அது தான் அதன் பொருள். ஒருவர் ப்ராஹ்மணனாக ஆகக் கூடாது என்று தடை செய்யப்படவில்லை. இல்லை, ஒருவர் ப்ராஹ்மணனாகலாம். அவருக்கு ப்ராஹ்மண சேர்க்கை கிடைத்து, அவர் ப்ராஹ்மணனால் பயிற்சி அளிக்கப்பட சம்மதித்தால், அவன் ப்ராஹ்மணனாகலாம். மேலும் ப்ராஹ்மண என்றால் ப்ரஹ்ம ஜானாதி இதி ப்ராஹ்மண, பிறப்பில் அல்ல. யாரேனும் பூரணத்தைப் பற்றிய முழுமையான அறிவு பெற்றிருந்தால், அவன் ப்ராஹ்மணனாவான். ஜன்மனா ஜாயதே ஶூத்ர꞉. பிறப்பில் அனைவருமே ஶூத்ர. அவன் ப்ராஹ்மண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவன் ஶூத்ர தான். ஜன்மனா ஜாயதே ஶூத்ர꞉ ஸம்ʼஸ்காராத் பவேத் த்விஜ꞉. ஸம்ʼஸ்காரா என்றால் சுத்திகரிப்பு. அதுதான் ஸத்யம்ʼ ஶௌசம்."
750203 - சொற்பொழிவு BG 16.07 - ஹானலுலு