TA/750204 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"விடுதலை என்றால் பௌதிக இயற்கையின் குணங்களின் உள்ளாற்றளால் பாதிக்கப்படாமல், பௌதிக இயற்கையின் குணங்களால் பாதிக்கப்படாமல், முக்கியமாக ரஜோ, தமோ குணங்கள். அதுதான் முக்தி. முக்தி ஒன்றும் மிகவும் அற்புதமான விஷயமல்ல. அது உணர்வுகளின் வேற்றுமைகளாகும். அனைவரும் பௌதிகத்தில் உணர்வு பூர்வமாக இருக்கிறார்கள்: "நான் இந்த உடல்," "நான் அமெரிக்கன்," "நான் இந்தியன்," "நான் இது," "நான் அது." இது ஒரு உணர்வு. மேலும் இந்த உணர்வு சுத்திகரிக்கப்படும் பொழுது, தத்-பரத்வேன நிர்மலம். . . நிர்மலம் என்றால் முழுமையாக சுத்திகரிக்கப்பட்டவர். அதுதான் பக்தியின் தளம்."
750204 - சொற்பொழிவு BG 16.08 - ஹானலுலு