"பகவத் கீதையில் கூட—குருர் ந ஸ ஸ்யாத் (SB 5.5.18). அவனுடைய சீடரை இறப்பு என்னும் உடனடியான ஆபத்திலிருந்து காப்பாற்றும் திறமை இருக்கும்வரை அவன் குருவாகக் கூடாது. ந மோசயேத் ய꞉ ஸமுபேத-ம்ருʼத்யும். இந்த பிறப்பு, இறப்பு என்னும் சுழல் நடந்துக் கொண்டிருக்கிறது. குருவின் வேலை யாதெனில் இந்த பிறப்பு, இறப்பு என்னும் சுழலை எவ்வாறு நிறுத்துவது என்பதுதான். மேலும் இது ஒன்றும் கடினமானதல்ல. அவனுக்கு கிருஷ்ணரை புரிந்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள், மேலும் கிருஷ்ணர் உறுதியளிக்கிறார், "என்னை யாராவது நன்றாக புரிந்துக் கொண்டால், பிறகு அவன் இந்த உடலைவிட்ட பிறகு, அவன் என்னிடம் வருவான்." இதில் எங்கே சிரமம்? அவனுக்கு கிருஷ்ண உணர்வை அளியுங்கள், அவன் பிறப்பு மேலும் இறப்பிலிருந்து காப்பாற்றப்படுவான். இதில் அற்புதம் எதுவும் இல்லை. இதில் ஏமாற்று வித்தை எதுவும் இல்லை."
|