"நீங்கள் ஒரு பௌதிக விஷயத்தை எடுத்துக் கொண்டால், எதையும், அதை நீங்கள் மில்லியன் பகுதிகளாக பிரித்தால், அதன் அசல் வடிவம் முடிவடைந்துவிடும். அது இனிமேல் இல்லை. நீங்கள் ஒரு காகிதத்தை எடுத்து, சிறு துண்டுகளாக வெட்டி அதை எங்கும் எறிந்துவிடுங்கள், பிறகு அசல் காகிதம் மறைந்துவிடும். அது இனிமேல் இல்லை. அதுதான் பௌதிகம். ஆனால் கிருஷ்ணர்... கிருஷ்ணர், அவர் விரிவாக்கமுடையவர். ஏகோ பஹு ஸ்யாம் (Chandogya Upanishad 6.2.3). பகவான் கூறுகிறார், "நான் பற்பலவாகலாம்." பல; இருப்பினும் அவர் அங்கிருக்கிறார். அவர் பற்பலவானதால், அவருடைய அசல் முடிந்துவிட்டது என்பதல்ல. இல்லை. அதுதான் வேதத்தில் இருக்கும் தடை உத்தரவு: பூர்ணஸ்ய பூர்ணம் ஆதாய பூர்ணம் ஏவ அவஶிஷ்யதே (Īśo Invocation). அவர் இன்னும் பூர்ணமாக இருக்கிறார். ஒன்றை ஆயிரம் முறை கழித்தாலும் அந்த ஒன்று அப்படியே ஒன்றாகவே இருக்கிறது. அதுதான் பூரணம். பூரண உண்மை என்றால் அந்த உண்மை குறையாது அல்லது சம்மந்தபட்டதாகாது அல்லது நிபந்தனையாகாது. அதுதான் பூரண உண்மை."
|