TA/750206 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"எனவே ஒரு நாயின் அமைப்பான நிலை என்னவென்றால் அதற்கு ஒரு நல்ல எஜமான் இருக்க வேண்டும். அது பிறகு சந்தோஷமாக இருக்கும். அது பிறகு சந்தோஷமாக இருக்கும். இல்லையெனில் அது சந்தோஷமாக இருக்காது. இல்லையா? இல்லையெனில் அது தெரு நாயாகும். சில நேரங்களில் அது நகராட்சியால் கொல்லப்படுகிறது.

அதேபோல், நம் நிலை நாயின் நிலைமைதான். நாம் அதை புரிந்துக் கொள்ள வேண்டும். நாம் சுதந்திரமாக வாழ முடியாது. அது சாத்தியமல்ல. அனைத்து ஜீவாத்மாக்களும். ஆகையினால் வேதத்தின் தடை உத்தரவில் நித்யோ நித்யானாம்ʼ சேதனஶ் சேதனானாம் ஏகோ யோ பஹூனாம்ʼ விததாதி காமான் (Kaṭha Upaniṣad 2.2.13). பகவானும் ஜீவாத்மாக்களும், அவர்கள்... இருவரும் ஜீவாத்மாக்கள். ஆனால் பகவானுக்கும் ஜீவாத்மாக்களும் உள்ள வேறுபாடு என்ன? ஜீவாத்மாக்கள் பகவானால் பராமரிக்கபடுகிறார்கள், மேலும் பகவான் பராமரிப்பவர். அதுதான் வேறுபாடு."

750206 - சொற்பொழிவு BG 16.10 - ஹானலுலு