TA/750208 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் ஹானலுலு இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"சைதன்ய மஹாபிரபு சொன்னார்... சைதன்ய பிரபு சொன்னார் அதாவது "எனக்கு கிருஷ்ணர் மீது ஒரு சிட்டிகை பக்தி கூட இல்லை." நீங்கள் அவ்வாறு கூறினால், "ஏன் அழுதுக் கொண்டிருக்கிறீர்கள்?" "அது சும்மா வேஷம் போடுகிறேன்." சைதன்ய மஹாபிரபு சொன்னார் அதாவாது "நான் கிருஷ்ணருக்காக அழுவது என்னை பற்றி விளம்பரப்படுத்திக் கொள்ள, அதாவது நான் சிறந்தவனாகிவிட்டேன்... ஆனால் உண்மையில் எனக்கு கிருஷ்ணர் மீது ஒரு சிட்டிகை பக்தி கூட இல்லை." "இல்லை, நீங்கள் ஒரு உயார்ந்த பக்தர். எல்லோரும் சொல்கிறார்கள்." இல்லை. எல்லோரும் சொல்லலாம், ஆனால் நான் அவ்வாறல்ல." "நீங்கள் ஏன் அவ்வாறல்ல?" "ஏனென்றால், இப்பொழுது கிருஷ்ணர் இல்லாமல், நான் இன்னும் உயிருடன் இருக்கிறேன். அதாவது கிருஷ்ணர் மீது எனக்கு அன்பில்லை என்பதற்கு அதுதான் அதாரம்." இதுதான் சைதன்ய மஹாபிரபுவின் அறிக்கை. "எனக்கு ஒரு துளி அன்பாவது கிருஷ்ணர் மீது இருந்தால், நான் எவ்வாறு கிருஷ்ணர் இல்லாமல் நீண்ட காலமாக வாழ இயலும்?" ஶூந்யாயிதம்ʼ ஜகத் ஸர்வம்ʼ கோவிந்த-விரஹேண மே (Śikṣāṣṭaka 7).
எனவே இதுதான் கிருஷ்ணர் மீதான அன்பு "எப்படி என்னால் வாழ் இயலும்—கிருஷ்ணரிடமிருந்து பிரிந்திருத்தல்." |
750208 - சொற்பொழிவு BG 16.13-15 - ஹானலுலு |