"எனவே புத்திசாலித்தனம் என்றால் கிருஷ்ணரை கண்டுபிடிப்பது. ஈஶோபநிஸத்தில் கூறப்பட்டுள்ளது, அதாவது "என அன்பு பகவானே, உங்களுடைய இந்த திகைப்பூட்டும் கதிர்களை தயவு செய்து அணைத்துவிடுங்கள், அப்பொதுதான் நான் உண்மையாக உங்கள் திருமுகத்தை பார்க்க இயலும். " ப்ரஹ்ம-ஜ்யோதியினுள் கிருஷ்ணர் இருக்கிறார். எனவே கிருஷ்ணரை பக்தி தொண்டின் மூலம் தான் பார்க்க முடியும். நீங்கள் கிருஷ்ணரிடன் சவாலிட முடியாது, "கிருஷ்ணா, இங்கே வாருங்கள். நான் உங்களை பார்க்க வேண்டும்." இல்லை. அது சாத்தியம் அல்ல. நீங்கள் சரணடைய வேண்டும். ஆகையினால் கிருஷ்ணர் கூறுகிறார், ஸர்வ-தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம்ʼ ஶரணம்ʼ வ்ரஜ (BG 18.66). அதுதான் முறை. நீங்கள் சரணடைய வேண்டும்."
|