TA/750210 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் லாஸ் ஏஞ்சல்ஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி
TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள் |
"எனவே கிருஷ்ணர் கூறுகிறார் அதாவது "பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன், இந்த தத்துவத்தை நான் சூரிய பகவானிடம் பேசிய பொழுது, நீயும் அங்கிருந்தாய், ஏனென்றால் நீ என்னுடைய அந்தரங்கமான நண்பன். நான் அவதாரம் எடுக்கும் பொழுதெல்லாம், நீயும் அங்கிருந்தாய். ஆனால் இதில் வித்தியாசம் என்னவென்றால் நீ மறந்துவிட்டாய்; இவ்வாறு சொன்னேன் என்று நான் நினைவில் கொள்கிறேன்."
எனவே அதுதான் கிருஷ்ணருக்கும் சாதாரண ஜீவாத்மாக்களுக்கும் உள்ள வித்தியாசம். கிருஷ்ணர் அனைத்தையும் நினைவில் கொள்கிறார், அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார். வேதாஹம்ʼ ஸமதீதானி (BG 7.26): "எனக்கு அனைத்தும் தெரியும்." அதுதான் கிருஷ்ணர். ஆனால் நமக்கு தெரியாது. அதுதான் வித்தியாசம். கிருஷ்ணர் ஆள்மாறாட்டம் செய்பவர் அல்ல. அவரும் ஒரு நபர் தான், ஆனால் அவர் நம்மை போல் ஒரு நபர் அல்ல, உங்களைப் போல், என்னைப் போல் அல்ல. அவருடைய ஆளுமை மிக உயர்ந்தது. அவரைவிட உயர்ந்தவர் எவரும் இல்லை. ந தஸ்ய கார்யம்ʼ கரணம்ʼ ச வித்யதே ந தத்-ஸமஶ் சாப்யதிகஶ் ச த்ருʼஶ்யதே (Śvetāśvatara Upaniṣad 6.8). இவை வேத தகவல்கள் ஆகும்." |
750210 - சொற்பொழிவு SB 02.08.07 - லாஸ் ஏஞ்சல்ஸ் |