"எனவே இங்கே கிருஷ்ணர் அர்ஜுனனிடம் கூறுகிறார் அதாவது... அவன் கிருஷ்ணரின் தலைமைத்துவத்தை ஏற்றுக் கொண்டதால், கிருஷ்ணர் அவனை இவ்விதமாக துண்புறுத்துகிறார். இவ்விதமாக துண்புறுத்துகிறார், அதாவது அர்ஜுன், கிருஷ்ணருடன் ஒரு நண்பனாக உரையாடிக் கொண்டிருந்தான். எனவே நண்பர்கள் என்றால், சம நிலை. ஆனால் அவன் அந்த நிலையை விட்டு கொடுத்துவிட்டான். அவன் ஒரு சீடரின் நிலையை ஏற்றுக் கொண்டான். ஒரு சீடர் என்றால் தானாக முன்வந்து ஆன்மீக குரு கற்பிக்கும் ஒழுக்கமான முறைகளுக்கு கட்டுப்பட சம்மதிப்பவன். ஒருவன் சீடராகும் பொழுது, அவன் ஆன்மீக குருவின் கட்டளைகளை மீறக்கூடாது. ஶிஷ்ய. ஶிஷ்ய, இந்த வார்த்தை ஶாஸ்-தாது, என்னும் வார்த்தையின் வேரிலிருந்து வந்தது, அப்படியென்றால், "நான் உங்கள் ஆளுமையை ஏற்றுக் கொள்கிறேன்." எனவே முன்பாகவே அர்ஜுன் ஏற்றுக் கொண்டார் ஶிஷ்யஸ் தே (அ)ஹம்ʼ ஶாதி மாம்ʼ ப்ரபன்னம் (BG 2.7): "நான் இப்பொழுது உங்களிடம் சரணடைந்துவிட்டேன், மேலும் தானாக முன்வந்து உங்கள் ஆளுமையை ஏற்றுக் கொள்கிறேன்." இதுதான் ஆன்மீக குருவிற்கும் சீடனுக்கும் உள்ள உறவுமுறை."
|