TA/750212 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: சரியான அறவு யாதெனில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதுதான், அதுதான் எப்போதும் சரியானது. அதுதான் சரியானது. மனிதன் இறப்பது போல். யாரோ இவ்வாறு கூறினால்: "மனிதன் இறக்கிறான்," அது சரியான அறிவு. அதுதான் எப்போதும் சரியானது.

விருந்தினர் (5): ஒருவேளை அவர் மறுபிறவி எடுத்திருந்தால்?

பிரபுபாதர்: இல்லை, இல்லை, "இறப்பது" என்றால் உடல் இறக்கிறது. ஆன்மா இறப்பதில்லை. ந ஹன்யதே ஹன்யமானே ஶரீரே (BG 2.20). உடல் நிர்மூலமாகும் பொழுது... உடல் முதுமை அடையும். இந்த துணியைப் போல். நான் அதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன், ஆனால் அது பழையதாகும் போது, பயன்படுத்த முடியவில்லை என்றால், பிறகு நான் அதை தூக்கி எறிந்துவிடுவேன். நான் மற்றொரு ஆடை வாங்குவேன். இந்த உடலும் அதைப் போல் தான். ஆன்மா நித்தியமானது. ந ஜாயதே ந ம்ரியதே வா கதாசித். அது இறப்பதில்லை, அது பிறப்பதில்லை. ஆனால் அவன் பௌதிக நிலையில் இருப்பதால், அவன் பௌதிக உடலை மாற்ற வேண்டியுள்ளது, ஏனென்றால் எந்த பௌதிக பொருளும் நிலையானதல்ல."

750212 - உரையாடல் - மெக்சிக்கோ