"எனவே பகவத் கீதை இந்த குறிக்கோளுடன் ஆரம்பமாகிறது, அதாவது ஒருவர் தான் இந்த ஜட உடல் அல்ல என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும். அந்த அறிவு தற்போதைய தருணத்தில் உலகம் முழுவதிலும் பற்றாக்குறையாக இருக்கிறது. ஆம். அனைவரும் விலங்குகளைப் போல் இந்த உடலை வைத்து அடையாளம் காட்டுகிறார்கள். ஆகையினால் கிருஷ்ணர் அர்ஜுனனை துன்புறுத்துகிறார் அதாவது "உனக்கு மிருகத்தனமான, வாழ்க்கையின் கருத்து இருக்கிறது, இருப்பினும் நீ ஒரு மிகுந்த கற்றறிந்த அறிஞர் போல் பேசுகிறாய். இந்த உடல் காரணமாக எந்த கற்றறிந்த அறிஞரும் புலம்பமாட்டார்." பகவத் கீதையில் கூறபட்டுள்ளது, தீரஸ் தத்ர ந முஹ்யதி (BG 2.13). தீர... தீர என்றால் கல்வியால் நிதானமானவர். அவருக்கு தொந்தரவு இல்லை."
|