TA/750213 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: முதலில் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும், அதாவது நம் புலன்கள் குற்றம் நிறைந்ததாக இருப்பதால், நாம் சேகரிக்கும் அறிவு எத்தகையதானாலும், அது குற்றம் நிறைந்ததாக இருக்கும். அது குற்றம் நிறைந்ததாக இருக்கும். ஆகையினால், நீங்கள் உண்மையான அறிவு உடையவராக வேண்டும் என்றால், நீங்கள் குற்றமற்ற அறிவுடைய யாரோ ஒருவரை அணுக வேண்டும்.

பேராசிரியர்: ஆம், ஆம்.

பிரபுபாதர்: உங்களால் முடியாதா...ஆஹ்?

விருந்தினர் (1): யாரோ குற்றமற்றவர் என்று நாம் எவ்வாறு தெரிந்துக் கொள்வது?

பிரபுபாதர்: அது மற்றொறு விஷயம். ஆனால் முதலில், அடிப்படை கொள்கை யாதெனில் நம் புலன்கள் குற்றம் நிறைந்தது என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும், மேலும் நாம் குற்றம் நிறைந்த இந்த புலன்களால் சேகரிக்கும் அறிவு எத்தகையதானாலும், அவை குற்றம் நிறைந்ததே. எனவே நாம் குற்றமற்ற அறிவை பெற விரும்பினால், பிறகு குற்றமற்ற புலன்கள் உடைய ஒருவர், குற்றமற்ற அறிவை உடைய ஒருவரை நாம் அணுக வேண்டும். அதுதான் கொள்கை. அதுதான் வேத கொள்கை. ஆகையினால், வேத கொள்கை கூறுகிறது, தத்-விஜ்ஞானார்தம்ʼ ஸ குரும் ஏவாபிகச்சேத் (MU 1.2.12). உங்களுக்கு ஸன்ஸ்க்ரித், தெரியுமா, சரியா? "அந்த குற்றமற்ற அறிவை தெரிந்துக் கொள்ள, ஒருவர் குருவை அணுக வேண்டும்."

750213 - உரையாடல் - மெக்சிக்கோ