"எனவே பக்தியின் ஒரு தரம் திதிக்ஷா ஆகும், சகிப்புத்தன்மை. அது கற்றுக் கொள்ளப்பட வேண்டும், வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு சகித்துக் கொள்ள வேண்டும் என்று. எவ்வாறு என்றால் இந்தியாவில் இருக்கும் உண்மையான ப்ராஹ்மணர்கள்... நமக்கு மேற்கு நாடுகளிலும் ப்ராஹ்மணர்கள் இருக்கிறார்கள், இப்பொது உருவாக்கப்பட்டது. எனவே கிள்ளும் குளிராக இருந்தாலும், அவர் அதிகாலையில் குளிக்க மறக்கவில்லை. அது வெறுமனே பயிற்சி தான். அது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு வலிக்கும், ஆனால் நீங்கள் பயிற்சி செய்தால், இனி வலி இருக்காது. எனவே ஒருவர், கடும் குளிராக இருப்பதால், அதிகாலையில் குளிக்க பயிற்சி செய்யும் பழக்கத்தை விட்டுவிடக் கூடாது. அது கூடாது. அதேபோல், கோடை காலத்தில், அங்கே சுட்டெரிக்கும் வெப்பமாக இருப்பதால், ஒருவர் முடிவு செய்யக் கூடாது, அதாவது "நாம் சமைப்பதை நிறுத்திவிடுவோம்." என்று. ஏனென்றால் சமையலறையில் மிகவும் வெப்பமாக இருக்கலாம், ஆனால் அந்த காரணத்தால் நாம் சமைப்பதை விட்டுவிடக் கூடாது. அதேபோல், அங்கே இருக்கும் அனைத்து விதிகள் மற்றும் விதிமுறைகள், வேதனையாக இருக்கலாம், ஆனால் நாம் அதை விட்டு கொடுக்க முடியாது. நாம் எவ்வாறு சகிப்புத்தன்மையுடன் இருப்பது என்று கற்றுக் கொள்ள வேண்டும்."
|