TA/750214b உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பக்தனாகாமல் யாரும் பகவனின் ராஜ்யதினுள் நுழைய அனுமதி இல்லை. மேலும் ஒரு பக்தனாவதற்கு ஒரு சிரமமும் இல்லை ஏனென்றால்... பக்தனாவது என்றால் நான்கு கொள்கைகள். ஒரு விஷயம் என்னவென்றால் எப்பொழுதும் கிருஷ்ணரை பற்றி நினைத்துக் கொண்டிருக்க வேண்டும். மன்-மனா பவ மத்-பக்த꞉. அதுதான் பக்தன். வெறுமனே கிருஷ்ணரை பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால்... அதுதான் ஹரே கிருஷ்ணா. நீங்கள் ஹரே கிருஷ்ணா உச்சாடனம் செய்யும் போது நீங்கள் கிருஷ்ணரை நினைப்பீர்கள். நீங்கள் உடனடியாக பக்தனாகிறீர்கள். பிறகு, மன்-மனா பவ, மத்-யாஜீ: ஆனவுடன்: "நீங்கள் என்னை வழிபடுங்கள்," மாம்ʼ நமஸ்குரு, "மேலும் வணங்குங்கள்." இது மிகவும் எளிமையான விஷயம். நீங்கள் கிருஷ்ணரை பற்றி நினைத்து மேலும் சிறிது வணங்கி மற்றும் வழிபட்டால், இந்த மூன்றும் உங்களை ஒரு பக்தனாக்கும் அத்துடன் நீங்கள் வீடுபேறு அடைவீர்கள், பரமபதம் அடைவீர்கள்."
750214 - உரையாடல் Q&A - மெக்சிக்கோ