"நீங்கள் நோய்வாய்பட்டிருந்தால், நீங்கள் தகுந்த மருந்தும், சிகிச்சையும் பெற்றால் குணம் அடையலாம். அவ்வளவுதான். நொய் நம்பிக்கையற்றதல்ல. இல்லையென்றால் , மக்கள் ஏன் சிகிச்சைக்காக மருத்துவரிடம் செல்ல வேண்டும்? அதேபோல், அறியாமையினால் நீங்கள் இந்த பரிதாபகரமான நிலையில் இருக்கிறீர்கள், ஆனால் ஒரு அங்கீகாரம் பெற்ற ஆன்மீக குருவிடம் நீங்கள் சிகிச்சை பெற்றால், பிறகு நீங்கள் குணமடைவீர்கள். முதலில் நாம் ஒவ்வொருவரும்—தூய்மையானவர்கள். இப்போது, பௌதிக நிலையால் நாம் இப்பொழுது மாசு அடைந்துவிட்டோம். அது... ஆனால் இந்த மாசுபட்ட பௌதிக நிலையிலிருந்து வெளிப்பட ஒரு செயல்முறை உள்ளது. பிறகு மறுபடியும் நாம் தூய்மையடைவோம். மேலும் நாம் தூய்மை அடைந்தவுடன், அங்கே இனி பிறப்பு, இறப்பு, முதுமை மேலும் நோய் இருக்காது. முடிந்துவிடும்."
|