"பகவான் பெரியவர்; நாம் சிறியவர்கள். இல்லையெனில், நாம் சமமானவர்ள். பகவானும் ஜீவாத்மா; நீங்களும் ஜீவாத்மாக்கள். பகவான் நித்தியமானவர்; நீங்களும் நித்தியமானவர்கள். பகவான் பேரின்பம் நிறைந்தவர்; நீங்களும் பேரின்பம் நிறைந்தவர்கள். எனவே தரத்தில், வேறுபாடு இல்லை. ஒரே வேறுபாடு அளவில்தான். எவ்வாறு என்றால் ஒரு துளி கடல் நீர், உப்பு கரிக்கும். அப்படி என்றால் அந்த துளியில் உப்பு இருக்கிறது. ஆனால் அந்த துளி நீரில் இருக்கும் உப்பின் அளவு, பரந்த நீர் பரப்பில் இருக்கும் உப்பின் அளவிற்கு சமமாகாது. மேலும் மற்றொரு உதாரணம் உள்ளது: பெரிய நெருப்பும், நெருப்பின் தீப்பொறிகள் போல. நெருப்பின் தீப்பொறிகளின் நெருப்பு, உங்கள் துணியில் விழுந்தால், ஒரு புள்ளி போன்ற இடம் எரிந்துவிடும். ஆனால் பெரிய நெருப்பு ஒரு கட்டிடத்தையே முழுமையாக எரித்துவிடும். எனவே பகவானின் தரம் நம் அனைவரிடமும் இருக்கிறது. நாம் ஒரு சிறிய கடவுளாக எடுத்துக் கொள்ளலாம், அவ்வளவுதான். ஆனால் சக்தி வேறுபட்டது. பகவானால் சூரியன் போன்ற காற்றில் மிதக்கும் கிரகத்தை உருவாக்க முடியும், மேலும் உங்களால் காற்றில் மிதக்கும் ஒரு சிறிய ஆகாய விமானம் உருவாக்க முடியும். பகவானால் விமானத்தைப் போல் கட்டுமானம் கொண்ட ஒரு கொசுவை உருவாக்க முடியும், ஆனால் உங்களால் அதை செய்ய முடியாது. அதுதான் உங்களுக்கும் பகவானுக்கும் உள்ள வேறுபாடு."
|