"நாம் அனைவரும், நாமும் பகவானின் சக்தி. அங்கே மூன்று வகையான சக்திகள் இருக்கின்றன. அவருக்கு பல-சக்திகள் இருக்கின்றன—பராஸ்ய ஶக்திர் விவிதைவ ஶ்ரூயதே (CC Madhya 13.65, purport) ஆனால் அவை மூன்று விதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. முதலாவது சக்தி ஆன்மீக சக்தி, அடுத்தது பௌதிக சக்தி என்று அழைக்கப்படுகிறது, மற்றும் மூன்றாவது நடுதர சக்தி. ஆன்மீகம் மற்றும் நடுதர சக்தி நம்மால் புரிந்துக் கொள்ள முடியும். குறைந்தபட்சம் நம்மால் உணர முடியும் ... ஒரு வாழ்ந்துக் கொண்டிருப்பவன் மேலும் இறந்தவன். வாழ்ந்துக் கொண்டிருப்பவன் என்றால் ஆன்மாவும் கருப்பொருளும் இணைந்தது. மேலும் இறந்தவன் என்றால் கருப்பொருள் அங்கிருக்கிறது; ஆன்மா போய்விட்டது. எனவே ஆன்மா என்றால் என்ன, கருப்பொருள் என்றால் என்ன என்று நீங்கள் வேறுபடுத்திக் கொள்ளலாம். எனவே ஆதேபோல், இந்த பௌதிக உலகத்தைப் போல் , அங்கே மற்றொறு , ஆன்மீக உலகம் உள்ளது. நாம் இந்த உயிர் வாழிகள், நாம், இயற்கையினால், ஆன்மீகமாவோம், ஆனால் நமக்கு இந்த ஜட உலகில் அல்லது ஆன்மீக உலகில் வாழும் ஆற்றல் இருப்பதால், நாம் நடுதரமானவர்கள் என்று அழைக்கப்படுகிறோம்."
|