TA/750218 சொற்பொழிவு - ஶ்ரீல பிரபுபாதர் மெக்சிக்கோ இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"ஆகையினால் இந்த மானிட வாழ்க்கை கிருஷ்ண உணர்வை அபிவிருத்தி செய்ய, நேரத்தை சேமிப்பதற்காக ஆனது. தேவையற்ற விதத்தில் நேரத்தை வீனாக்க அல்ல, நமக்கு அடுத்த மரணம் எப்பொழுது வரும் என்று தெரியாது, மேலும் அடுத்த பிறவிக்கு நாம் தயார் செய்யவில்லை என்றால், பிறகு எந்த நேரத்திலும் நாம் மரணம அடையலாம், மேலும் நாம் பௌதிக இயற்கையால் அளிக்கப்படும் உடலை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆகையினால் கிருஷ்ண பக்தி இயக்கத்தில் சேர்ந்திருக்கும் நீங்கள் அனைவரும் மிகவும் கவனமாக வாழ வேண்டும் அப்பொழுது தான் மாயா கிருஷ்ணரின் கைகளிலிருந்து உங்களை பறிக்க இயலாது. வெறுமனே ஒழுங்கு கொள்கைகளை பின்பற்றுவதால், மேலும் குறைந்தது பதினாறு சுற்று உச்சாடனம் செய்வதால் நாம் நம்மை நிலையாக வைத்துக் கொள்ளலாம். பிறகு நாம் பாதுகாப்பாக இருப்போம். ஆக வாழ்க்கையின் முழுமையைப் பற்றி நீங்கள் சில தகவல்களை பெற்றிருக்கிறீர்கள். அதை தவறாக பயன்படுத்தாதீர்கள். அதை மிக சீராக வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், மேலும் உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக அமையும்."
750218 - சொற்பொழிவு Departure - மெக்சிக்கோ