"நம் புலன்கள் பக்குவமற்றது என்பதை நாம் முதலில் புரிந்துக் கொள்ள வேண்டும். எவ்வாறு என்றால் நாம் இந்த அறையில் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். நமக்கு கண்கள் இருக்கின்றன, ஆனால் அங்கே, சுவாருக்கு அப்பால் என்ன இருக்கிறது, என்ன நடந்துக் கொண்டிருக்கிறது என்று நம்மால் பார்க்க முடியாது. சூரியன் இந்த பூமியைவிட பதினான்கு இலட்சம் மடங்கு பெரியது, மேலும் நமக்கு ஒரு வட்டு போல் தெரிகிறது. கண்ணிமை கண்களுக்கு அருகாமையில் இருக்கிறது, ஆனால் கண்ணிமை என்ன என்பதை நாம் பார்க்க முடியாது. விளக்கு அனைக்கப்பட்டால், நாம் பார்க்க முடியாது. எனவே நாம் சில நிபந்தனைகளின்படி பார்க்கலாம். பிறகு நம் பார்வையின் மதிப்பென்ன? நாம் தொலைநோக்கியை உற்பத்தி செய்தாலும், அதுவும் பக்குவமற்ற புலன்களால் உற்பத்திச் செய்யப்பட்டது, எனவே அதுவும் பக்குவமற்றது. எனவே நம் பக்குவமற்ற புலன்களை கையாளுவதன் வழி புரிந்துக் கொண்ட எதுவானாலும், அது உண்மையான அறிவாகாது. எனவே உண்மையான அறிவை புரிந்துக் கொள்ளும் எங்கள் செயல் முறை யாதெனில், உண்மையான அறிவுடையவரிடமிருந்து அதை பெற்றுக் கொள்வதாகும். எவ்வாறு என்றால் நம் தந்தை யார் என்று சிந்திக்கவும் அல்லது ஊகிக்கவும் செய்தால், என் தந்தை யார் என்று புரிந்துக் கொள்வது சாத்தியமல்ல. ஆனால் நாம் தாயிடமிருந்து அந்த வார்த்தையை பெற்றால் அதாவது, "இதோ உன் தந்தை," அது பக்குவமானது. ஆகையினால், அறிவின் செயல் முறை ஊகிக்கப்படக் கூடாது, ஆனால் பக்குவமான நபரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். நாம் அறிவை ஒரு மன ஊகக்காரரிடமிருந்து பெற்றால், அது பக்குவமான அறிவாகாது."
|