TA/750221 உரையாடல் - ஶ்ரீல பிரபுபாதர் கராகஸ் இல் வழங்கிய அமிர்தத் துளி

TA/Tamil - ஸ்ரீல பிரபுபாதரின் அமிர்தத் துளிகள்
"பிரபுபாதர்: நாமும் இந்த ஒலிவாங்கி அல்லது இந்த பெரிய ஆகாயவிமானத்தைப் போல் ஏதாவது உருவாக்க முடியும். அது வரையறுக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கே மற்றொருவர் இருக்கிறார் எண்ணற்ற கிரகங்களை உருவாக்கியவர், மேலும் அது காற்றில் மிதக்கிறது. இல்லையா? ஒரு ஆகாயவிமானம் 747 ஐநூறு பயணிகள் பயனிக்கலாம், அதை உருவாக்கியதால் நாம் பெரிய விஞ்ஞானிகளாகிவிட்டோம் என்று நாம் பெருமை கொள்கிறோம். நாம் எத்தனை உருவாக்கி இருக்கிறோம்? ஒருவேளை நூறு, இருநூறு. ஆனால் அதேபோல் இந்த வானத்தில் மில்லியன் மற்றும் டிரில்லியன் கிரகங்கள் மிதந்துக் கொண்டிருக்கின்றன, மேலும் அந்த கிரகங்கள் பல பெரிய மலைகள், சமுத்திரங்கள் தன்னுள் கொண்டிருக்கும், மற்றும் அவை காற்றி மிதந்துக் கொண்டிருக்கும். நாம் உருவாக்குவது வரையறுக்கப்பட்டுள்ளது, ஆனல் அவரால் வரம்பற்ற பொருள்களை உருவாக்க முடியும். ஆகையினால் நமக்கு வரையறுக்கப்பட்ட மூளை உள்ளது, மற்றும் அவருக்கு வரம்பற்ற மூளை உள்ளது. அது சரியா?

ஜோஸ் மேக்கேல்: (ஸ்பானிஷ்)

இதயானந்தா: (மொழிபெயர்க்கிறார்) அவருக்கு மூளை இருக்கிறது என்று அது பரிந்துரைக்கிறது.

பிரபுபாதர்: ஆம். மிக்க நன்றி. (சிரிப்பொலி) எனவே அவருக்கு மூளை இருக்கிறது என்றவுடன், அவர் ஒரு நபர். ஆகையினால் இறுதியில் பகவான் ஒரு நபர் ஆவார்."

750221 - உரையாடல் - கராகஸ்