"பகவானின் மற்றொரு பெயர் "பிறக்காதவர்." பிறக்காதவர் என்றால் அவர் எந்த தந்தையாலும் பிறக்காதவர். அது வேத மொழியில் கூறப்பட்டுள்ளது, அதாவது அத்வைதம் அச்யுதம். . ., கோவிந்த³ம் ஆதி-புருஷம். ஈஶ்வர꞉ பரம꞉ க்ருʼஷ்ண꞉ ஸச்-சித்-ஆனந்த-விக்ரஹ꞉, அநாதிர் ஆதி꞉ (Bs. 5.1). அநாதி என்றால் அவர் தோன்றியதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் அவர் ஆதி; அவர் தான் அனைத்திற்கும் மூலமான் ஆதாரம். ஆகையினால் அது அநாதிர் ஆதி꞉ என்று சொல்லப்படுகிறது. அநாதி என்றால் அவர் தோன்றியதற்கான ஆதாரம் இல்லாதவர், ஆனால் அனைவரும் அவருடைய இருப்பின் காரணமாக தோன்றியவர்கள். இது மிகவும் எளிய புரிதல். பகவானை புரிந்துக் கொள்வதற்கு சிரமம் இல்லை. அநாதிர் ஆதி꞉ எல்லோருக்கும் ஆதி இருக்கிறது. எவ்வாறு என்றால், எனக்கு என் தந்தை இருக்கிறார், தந்தைக்கு அவருடைய தந்தை இருக்கிறார், அவருடைய தந்தை, அவருடைய..., ஆதி. ஆதி என்றால் மூலமான் ஆதாரம். ஆனால் நீங்கள் கிருஷ்ணரிடன், அல்லது பகவானிடம் சென்றால், அவருக்கு ஆதி இல்லை. அவர் தன்னிறைவு பெற்றவர். பகவானை புரிந்துக் கொள்ளும் இந்த எளிய சூத்திரத்தைப் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள், அதாவது பகவானுக்கு தோற்றம் இல்லை, ஆனால் அவர்தான் அனைத்திற்கும் மூலமானவர்."
|